BOXING பாகுபலி மைக் டைசன்!
Jan 16, 2026, 11:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

BOXING பாகுபலி மைக் டைசன்!

Murugesan M by Murugesan M
Jun 30, 2024, 07:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகின் தலைசிறந்த குத்துச்சண்டை வீரர்களில் ஒருவரான மைக் டைசனின் பிறந்தநாளில் அவரது வாழ்க்கை பயணத்தை சற்று திரும்பிப் பார்க்கலாம்.

“என்னால் யாருடனும் மோத முடியும், ஏனென்றால் நான்தான் இந்த உலகின் சிறந்த பாக்ஸர் என்று உறுதியாக நம்புகிறேன். பாக்ஸிங் மட்டுமல்ல வேறு எந்த வேலை செய்தாலும் என்னால் வெற்றிபெற முடியும். ஏனென்றால் நான் என்னை நம்புகிறேன்”

ஆம்… சொன்னபடியே பல அதிரடிகளை நிகழ்த்தி காட்டியவர் மைக் டைசன். BOXING RING-க்குள் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும்தான்.

முரட்டுத்தனம்… மூர்க்கக்குணம்… இவ்விரண்டின் மொத்த உருவமே மைக் டைசன். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புரூக்ளின் (Brooklyn) என்னுமிடத்தில் 1966-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி பிறந்தார்.

அவரது முழுப்பெயர் Michael Gerard Tyson. சிறுவயதிலேயே தந்தையைப் பிரிந்து தாயுடன் வாழ வேண்டிய நிலை. வளர்ப்பு தந்தையாலும் மகிழ்ச்சி இல்லை. டைசனுக்கு 10 வயது இருக்கும் போது Brownsville என்ற இடத்துக்கு அவரது குடும்பம் இடம்பெயர்ந்தது.

குற்றச்செயல் புரிவோர் அதிகம் வாழும் அந்த இடத்துக்குச் சென்ற டைசனும் பிக்பாக்கெட், திருட்டு உள்ளிட்டவற்றில் ஈடுபடத் தொடங்கினார். இயல்பிலேயே முரட்டு குணம் கொண்ட டைசன் அடிதடியிலும் இறங்கினார். அதற்காக அடிக்கடி கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளிக்குச் செல்வது டைசனின் வாடிக்கை.

13 வயதுக்குள் 38 முறை சீர்த்திருத்தப்பள்ளிகளுக்கு சென்ற டைசனை கண்டு நீதிபதியே TIRED-ஆகிப் போனார். இந்தச் சிறுவனை எப்படி திருத்துவது என்று யோசித்த நீதிபதி, டைசனை விட அதிக முரடர்கள் இருக்கும் TRYON சீர்த்திருத்தப் பள்ளிக்கு அவரை அனுப்பினார். அது டைசனுக்கு மேலும் வசதியாக போய்விட்டது. தம்மை விட வயதில் மூத்த சிறுவர்களை கூட அடித்து துவைத்துக் கொண்டிருந்தார்.

அவரை கட்டுப்படுத்த எண்ணினார் சீர்த்திருத்தப்பள்ளியின் ஆலோசகர் Bobby Stewart. முன்னாள் பாக்ஸரான அவர், தம்மோடு சண்டைக்கு வரும்படி டைசனை அழைத்தார். சற்றும் யோசிக்காமல் ரெடி என்ற மைக், Stewart உடன் மோதினார். ஆனால் பிறரை வீழ்த்தியதைப் போல Stewart-ஐ சாய்க்க முடியவில்லை.

குத்துச்சண்டை வீரர் என்பதால் டைசனின் தாக்குதலில் இருந்து தம்மை தற்காத்துக் கொண்ட Stewart, சில அடிகளிலேயே அவரை வென்றும் விட்டார். நம்மால் யாரை வேண்டுமானாலும் அடிக்க முடியும் என்ற டைசனின் நம்பிக்கையை உடைத்துவிட்டோம், அதனால் இனி அவர் ஒழுங்காக இருப்பார் என்று நினைத்தார் Stewart. அதற்கு மாறாக தமக்கு குத்துச்சண்டை கற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கையுடன் வந்து நின்றார் டைசன்.

சில மாத பயிற்சிக்குப்பின் D’Amato என்பவரிடம் டைசனை அனுப்பினார் Stewart. சிறந்த பயிற்சியாளரான D’Amato, டைசன் என்னும் கருப்பு வைரத்தை பட்டைதீட்டி உலகம் போற்றும் குத்துச்சண்டை வீரராக்கினார். 1986-ஆம் ஆண்டு தமது 20-ஆவது வயதில் HEAVY WEIGHT CHAMPION ஆனார் டைசன். 1987 முதல் 1990 வரை தோல்வியை அவர் சந்திக்கவேயில்லை.

மின்னல் வேகத்தில் எதிராளியை தாக்கி KNOCK OUT செய்வது டைசனின் ஸ்டைல். எப்போதுமே வல்லவருக்கு வல்லவர் இவ்வுலகில் இருப்பார் என்பதே இயற்கையின் நியதி. அப்படி வல்லவரான டைசனை வீழ்த்துவதற்கு வந்தார் Buster Douglas என்ற வீரர். 1990-ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ஆம் தேதி நடந்த அந்தப்போட்டியில் டைசன் அடைந்த தோல்வி, குத்துச்சண்டை வரலாற்றில் மிகப்பெரிய தோல்வி என்று அழைக்கப்படுகிறது.

அதைத்தொடர்ந்து நடந்த பல நிகழ்வுகளால் டைசனின் வாழ்க்கை இருளத் தொடங்கியது. இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக சிறைக்குச் சென்றது, 1997-ல் எதிராளியான Holyfield-ன் காதை கடித்து துப்பியது என தனக்குத்தானே சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டார் டைசன்.

“THE BADEST MAN ON THE PLANET” என்று அழைக்கப்பட்ட மைக் டைசன் பின்னாட்களில் தமது வாழ்வை WASTE என்று குறிப்பிட்டார். அவர் அப்படிச் சொன்னாலும் டைசனின் வாழ்க்கையில் சில நல்லவைகள் இருக்கத்தான் செய்கின்றன.

Tags: boxing Baahubali Mike Tyson!
ShareTweetSendShare
Previous Post

மத சுதந்திர அறிக்கை அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி!

Next Post

இண்டிகோ Vs ஏர் இந்தியா குறையுமா விமானக் கட்டணம்?

Related News

ஈரானில் மிகப்பெரிய இனப்படுகொலை – ஈரானில் மிகப்பெரிய இனப்படுகொலை

சுற்றுலாப்பயணிகள் வேதனை – வாகன சுங்கவரிக் கட்டணம் உயர்வுக்கு கடும் எதிர்ப்பு

இஸ்லாமிய நேட்டோ – அசிம் முனீரின் புதுப்பாதை இந்திய பாதுகாப்புக்கு சவால்?

30 ஆண்டுகால உத்தவ்தாக்கரே கோட்டை சரிந்தது – பாஜக வசமான மும்பை மாநகராட்சி!

வாசுதேவநல்லூர் பகுதியில் மாட்டுப்பொங்கலை ஒட்டி நடைபெற்ற பசு ஓட்டம்!

வெள்ளை புடவை அணிந்து பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு!

Load More

அண்மைச் செய்திகள்

கட்சி அலுவலகத்தில் அதிமுக நிர்வாகி விபரீத முடிவு!

டாப்சிலிப் வனப்பகுதியில் யானைப் பொங்கல் திருவிழா!

தஞ்சை பெரிய கோயிலில் மாட்டு பொங்கலையொட்டி நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்!

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள்!

தேசிய கீதத்திற்கு பிறகு தமிழ்தாய் வாழ்த்து பாட சொன்ன குடியரசு துணை தலைவர் CPR!

எக்ஸ் தளத்தில் உள்ள ஏஐ கருவியான குரோக்க்கு அந்நிறுவனம் முக்கிய கட்டுப்பாடு!

திருச்சியில் வெகு விமர்சையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி!

நெல்லையில் மாட்டுப் பொங்கல் கோலாகலம் – கால்நடைகளுக்கு நன்றி செலுத்திய விவசாயிகள்!

தோட்டத்து வீட்டில் மாட்டு பொங்கலை கொண்டாடிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா !

நந்தி பகவானுக்கும், சூரியனுக்கும் காட்சி கொடுத்த அண்ணாமலையார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies