தென்காசியில் கண்களைக் கட்டிக்கொண்டு 5 கி.மீ தூரத்துக்கு ஸ்கேட்டிங் செய்து கடந்து 9 வயது சிறுவன் உலக சாதனை படைத்தார்.
தென்காசியை சேர்ந்த ரெங்கநாதன் – காயத்ரி தம்பதியினரின் மகன் ஸ்ரீ முகுந்தன் சிறுவயது முதலே ஸ்கேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் குத்துக்கல்வலசை பகுதியில் விவேகானந்தா யோகா ஸ்கேட்டிங் கழகம் நடத்திய உலக சாதனை நிகழ்வில் பங்கேற்ற ஸ்ரீ முகுந்தன், கண்களைக் கட்டிக்கொண்டு 5 கி.மீ. தூரத்தை ஸ்கேட்டிங் மூலம் கடந்து சாதனை படைத்தார்.