சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விடுமுறை நாளையொட்டி மீன் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.
மீன்பிடி தடைக்காலம் முடிந்து 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில் மீன்களின் வரத்து அதிகமாக காணப்பட்டதால் விலை சற்று குறைந்தது.
இதனையடுத்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் குவிந்த மீன் பிரியர்கள் வஞ்சிரம், இறா, நண்டு, நவரை உள்ளிட்ட மீன்களை மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்.