திருச்சி மாவட்டம் காந்தி மார்க்கெட்டில் வைக்கப்பட்டிருந்த 3ஆயிரம் கிலோ ரசாயன மாம்பழங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
காந்தி மார்க்கெட்டில் உள்ள மாம்பழ மண்டிகளில் உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையிலான அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்கிருந்த செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 3 ஆயிரம் கிலோ ரசாயன மாம்பழக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.