ஸ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் 144 வது அவதார நாளை முன்னிட்டு புதுக்கோட்டையில் மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் தொடங்கிய ஓட்டம் மேல ராஜவீதி வழியாக சென்றது. மாற்றுத்திறனாளிகள் மன அழுத்தங்களை விட்டு வெளிவர வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் விதமாக பந்தயத்தில் பங்கேற்றவர்கள் மரக்கன்றை கையில் ஏந்தியபடி சென்றனர்.