புதுச்சேரியில் ஊர்க்காவல் படை வீரர்கள் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது.
புதுச்சேரியில் ஊர்க்காவல் படை வீரர் பணிகளுக்காக 20 ஆயிரத்து 189 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், உடற்தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான எழுத்துமுறை தேர்வு 12 மையங்களில் நடைபெற்றது.
500-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான இந்த தேர்வில் தேர்வர்களுக்கான பல விதிமுறைகள் விதிக்கப்பட்டது. அதில் உரிய நேரத்திற்கு வராத 3
மாணவர்கள் தேர்வு எழுத மையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை இதனால் அவர்கள் கதறி அழுதனர்.