ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணத்துக்கு, தெலங்கானா மாநிலத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெலங்கானா மாநிலம் ஜெகத்தியாலா மாவட்டத்தில் உள்ள கொண்டகட்டு ஆஞ்சநேயர் சுவாமி கோவிலுக்கு புறப்பட்டு சென்றார்.
அவருக்கு சித்திபேட்டை மாவட்டத்தில் உள்ள ஒண்டிமாமிடி கிராமத்தை சேர்ந்த ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது, பவன் கல்யாணுக்கு கஜ துளசி மாலையை கிரேன் மூலம் அணிவித்து அவருடைய ரசிகர்கள் மகிச்சியடைந்தனர்.