மயிலாடுதுறை மாவட்டம் உளுத்துக்குப்பை கிராமத்தில் மாநில அளவிலான கோ-கோ போட்டி நடைபெற்றது.
இதில் மயிலாடுதுறை, திருச்சி உள்ளிட்ட 26 மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
லயன்ஸ் கோ-கோ கிளப், மாவட்ட கோ-கோ விளையாட்டு கழகம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து நடத்திய இப்போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தன. போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.