ராமநாதபுரம் மாவட்டம், எம்.தூரி கிராமத்தில் ஸ்ரீ அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழாவையொட்டி, வடமாடு மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது.
50 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக நடைபெற்ற போட்டியில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகளும், 100க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.