உதகையில் பெய்து வரும் தொடர் மழையால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களாக மழை பெய்து வருகிறது.
இதனால் தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைந்து காணப்பட்டது. சிலர் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் பூத்துக் குலுங்கும் மலர்களை கண்டு ரசித்ததோடு செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
மேலும் பூங்காவில் உள்ள பெரிய புல்வெளி மைதானத்தில் சுற்றுலா பயணிகள் அமர்ந்தபடியும், அவ்வப்போது பெய்த சாரல் மழையில் நிலவிய குளு, குளு காலநிலையை அனுபவித்தும் மகிழ்ந்தனர்.