திருநெல்வேலி மாவட்டம், அகஸ்தியர் அருவியில் சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் குவிந்து வருகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் மணிமுத்தாறு அருவிக்கு நீர் வரத்து அதிகரித்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏமாற்றமடைந்த சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்து பாபநாசம் அகஸ்தியர் அருவியை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக அகஸ்தியர் அருவியில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.