பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை மத்திய அமைச்சர்களும், பாஜக மூத்த தலைவர்களும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுடன் இணைந்து கேட்டு மகிழ்ந்தனர்.
மத்திய பிரதேசத்தின் செஹோர் பகுதியில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், பொதுமக்களுடன் இணைந்து மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்டு ரசித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், பிரதமர் மோடி நாடு முழுவதையும் தனது குடும்பமாகக் கருதி பணியாற்றுவதாகவும், தேசத்தின் நலனுக்காக உழைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சத்தீஸ்கர் முதலமைச்சர் விஷ்ணு தியோ சாய், ராய்ப்பூரில் பொதுமக்களுடன் இணைந்து மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்டு ரசித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, பொதுமக்கள் அனைவரும் தங்களது தாயின் பெயரில் மரக்கன்றை நட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மனதின் குரல் நிகழ்ச்சி குறித்து கருத்து தெரிவித்த பாஜக எம்பி பன்சூரி ஸ்வராஜ், தாயின் பெயரில் மரக்கன்று நட வேண்டுமென்ற பிரதமரின் வேண்டுகோள் தமக்கு உத்வேகம் அளித்ததாகக் கூறினார். இதனை செய்வதன் மூலம் தாய் மீதுள்ள பாசத்தை வெளிப்படுத்துவதோடு, சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும் அவர் தெரிவித்தார்.
இதேபோல், ஹரியானா முதலமைச்சர் நயாப் சிங் சைனி, பஞ்சகுலா பகுதியில் பிரதமர் நரேந்திர மோடியின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியை கேட்டு மகிழ்ந்தார்.