மத்திய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்தன.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய ஆதார சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக, 3 புதிய சட்டங்கள் இயற்றப்பட்டன.
பாரதிய நியாய சம்ஹிதா உள்ளிட்ட 3 குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு இயற்றியது. கடந்த ஆண்டு நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரின்போது இதுதொடர்பான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
குடியரசுத் தலைவர் இந்த சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்த பிறகு, கடந்த டிசம்பரில் அரசிதழில் வெளியானது. இந்த 3 புதிய குற்றவியல் சட்டங்களும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
இந்த புதிய சட்டத்தின்படி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. 18 வயதுக்கு உட்பட்ட சிறார் கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றத்திறகு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை, காவல் வரம்புக்கு அப்பாற்பட்டு எந்த காவல் நிலையத்திலும் புகாரளிப்பது போன்ற பல்வேறு அம்சங்கள் இந்த புதிய குற்றவியல் சட்டங்களில் இடம்பெற்றுள்ளன.