புனே அருகே சுற்றுலாவுக்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், புனேவின் ஹடாப்சர் பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் சுற்றுலாவுக்கு சென்றுள்ளனர்.
லோனாவாலாவில் உள்ள நீர்வீழ்ச்சியில் குளித்து கொண்டிருந்தபோது திடீரென அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதில் 17 பேரும் நீரில் அடித்து செல்லப்பட்டனர். சிலர் நீந்தி கரை சேர்ந்த நிலையில், ஒரு பெண் உள்ளிட்ட 2 குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
மேலும், மாயமான 2 குழந்தைகளை தேடும் பணியில் பேரிடர் மீட்புக்குழுனருடன், ராணுவ வீரர்களும் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் போலீசார், மழைக்காலம் தொடங்கியுள்ளதால் நீர்நிலைப் பகுதிகளுகு்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், சுற்றுலா சென்றவர்கள் நீரில் அடித்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.