திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் மாநில அளவிலான சிலம்பம் மற்றும் யோகா போட்டிகள் நடைபெற்றன.
வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமார், வணிகர் சங்க நிர்வாகி மாதேஸ்வரன் ஆகியோர் போட்டிகளைத் தொடங்கிவைத்தனர்.
வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட 25 மாவட்டங்களிலிருந்து சுமார் 1000, மாணவர்கள்போட்டியில் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும், சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன.