கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
மலையோர பகுதிகளில் பெய்து வந்த மழை குறைந்ததால், கோதை ஆற்றில் நீரோட்டம் சீரானது. இதனால் நான்கு நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஏராளமானோர் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.