உச்சரிக்கவே 20 நிமிடம் - 6 பக்க பெயர் கொண்ட மாமனிதர் : சிறப்பு தொகுப்பு!
Nov 10, 2026, 02:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உச்சரிக்கவே 20 நிமிடம் – 6 பக்க பெயர் கொண்ட மாமனிதர் : சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 12, 2025, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆறு பக்கத்திற்கு பெயர் வைத்திருக்கும் நபர் ஒருவர் பலரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார். அவரது பெயரை உச்சரிக்கவே 20 நிமிடங்கள் தேவைப்படும் என்ற நிலையில், அவர் யார், இப்படி பெயர் வைக்கக் காரணம் என்ன? என்பதை பார்க்கலாம்.

நியூசிலாந்தைச் சேர்ந்த லாரன்ஸ் வாட்கின்ஸ் என்ற நபர்தான், 6 பக்க பெயருக்கு சொந்தக்காரர்… உலகின் மிக நீளமான பெயருக்கான கின்னஸ் சாதனையையும் படைத்திருக்கிறார்… ஆமாம் இவ்வளவு பெரிய பெயரை இவரை தவிர வேறு யார் வைக்க முடியும்…

ஆறு பக்க நீளத்திற்கு பெயரை வைத்திருக்கும் லாரன்ஸ் வாட்கின்ஸ், மேற்கு ஆசியா, பாலினேசியா, ஐரோப்பா கலாச்சாரங்களால் ஈர்க்கப்பட்டதுதான் தாமதம், அவரது பெயரை வாக்கியமாக நீட்டி நிமிர்ந்துவிட்டார்…

அவரது பெயரை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க நீதிமன்றமே போராட வேண்டியிருந்த காரணத்தால், உடனடியாக தேசிய சட்டங்களில் மாற்றத்தைக் கொண்டுவரவும் தூண்டியது. சுருக்கமாக அழைக்கப்படும் லாரன்ஸ் வாட்கின்ஸ், சாதனைக்காக கடுமையாக போராட வேண்டியிருந்தது. கின்னஸ் உலக சாதனை படைத்த லாரன்ஸின் பெயரில் இரண்டாயிரத்து 253 நடுப்பெயர்கள் உள்ளன, முழுமையாக எழுதும்போது ஆறுபக்கங்களுக்கு நீள்கின்றன…

சிலர் விரும்பும் வித்தியாசமான, அசாதாரணமாக பதிவுகள் தன்னை வெகுவாக ஈர்த்ததாகக் கூறும் வாட்கின்ஸ், அதில் ஒருவரான தான் இருக்க விரும்பியதாக புன்னகைக்கிறார். கின்னஸ் சாதனையில் முறியடிக்கக் கூடிய சாதனை என்று ஏதாவது உள்ளதா என உலக சாதனை புத்தகத்தை முழுமையாக புரட்டியதாகவும், அப்போதுதான் நீளமான பெயரை சேர்த்து சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாகவும் வாட்கின்ஸ் கூறுகிறார்.

அவரது பெயரில் காதல், கணிதம் போன்ற வார்த்தைகள் மட்டுமல்லாமல் ஷெர்லாக், டயோனிசஸ், டோஃபு என அனைத்தும் இருந்தது. இவ்வளவு பெரிய பெயரை வைத்திருப்பது வேடிக்கையாக இருந்தாலும் நடைமுறைக்கு ஒத்துவரவில்லை… அதிகாரப்பூர்வ ஆவணங்களில் பொருந்தவில்லை, ஏன் திருமணத்தின்போது பெயரை சொல்ல 20 நிமிடங்கள் மேல் ஆனது என்பதையும் ஒப்புக்கொள்கிறார் லாரன்ஸ் வாட்கின்ஸ்…..

பெயரை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பது ஒரு காகிதத்தில் கையெழுத்திடுவது போல் எளிதானதாக இல்லை, அது ஒரு முழுமையான நீதிமன்றப் போராட்டமாக மாறியது.
முதலில், மாவட்ட நீதிமன்றம் வாட்கின்ஸின் கோரிக்கையை அங்கீகரித்தது, ஆனால் பதிவாளர் ஜெனரல் அதைப் பதிவு செய்ய மறுத்துவிட்டார், இது அதிகாரப்பூர்வ பயன்பாட்டிற்கு சாத்தியமற்றது என்று கூறினார். பின்னர் மேல்முறையீடு செய்து உயர் நீதிமன்றத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

வாட்கின்ஸின் பழைய நியூசிலாந்து பாஸ்போர்ட்டில் அவரது அனைத்து பெயர்களும் பொருந்தும் வகையில் கூடுதலாக ஆறு பக்கங்கள் இணைக்கப்பட்டிருந்தன, அதே நேரத்தில் அவரது பிறப்புச் சான்றிதழின் பின்புறத்தில் மேலும் ஆறுபக்கங்கள் சேர்க்கப்பட்டிருந்தன.

அவரது வழக்குக்குப் பிறகு, வேறு யாரும் இதேபோன்ற சாதனையை முயற்சிப்பதைத் தடுக்க நியூசிலாந்தில் இரண்டு சட்டங்கள் திருத்தப்பட்டன என்பதுதான் இதில் ஹைலைட்டே…

Tags: New Zealandsix-page nameLawrence WatkinsGuinness World Record for longest name
Share
Tweet
SendShare
Previous Post

கமுதி அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழா – பொங்கல் வைத்து வழிபாடு!

Next Post

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா – ஏற்பாடுகள் தீவிரம்!

Related News

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா – புனித நீராடி விரதத்தை தொடங்கிய பக்தர்க்ள்!

48 மணி நேரத்திற்கு மேலாக காவலில் இருந்தால் அரசு ஊழியர் தற்காலிகப் பணியிடை நீக்கமா? – உச்ச நீதிமன்றம் விளக்கம்!

இன்றைய தங்கம் விலை!

குடியாத்தம் அருகே முன்விரோதம் காரணமாக நாட்டு துப்பாக்கியால் ஒருவர் சுட்டுக்கொலை!

கோவையில் இந்து முன்னணி மாநிலத் தலைவரின் கார் மீது, இருசக்கர வாகனம் மோதல் – போலீசார் விசாரணை!

தேனியில் கொல்லப்பட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் ஒப்பந்த பேருந்துகள் இயக்கம் – அரசு பேருந்துகளில் செல்ல ஆர்வம் காட்டாத பயணிகள்!

தீபாவளி விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள் – செங்கல்பட்டு அருகே போக்குவரத்து நெரிசல்!

உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு – போரை நிறுத்த இந்தியா பங்களிக்க தயாராக உள்ளதாக உறுதி!

வாக்குறுதிகளை நிறைவேற்றுமா ஜனநாயக கட்சி? : அதிபர் ட்ரம்ப் ஆட்சியில் காத்திருக்கும் சவால்கள் – சிறப்பு தொகுப்பு!

நாட்டில் குழப்பத்தை உருவாக்க நினைப்பவர்களுக்கு எதிராக மக்கள் ஒன்றிணைய வேண்டும் – தர்மேந்திர பிரதான்

துணை சபாநாயகர் மிரட்டியது உண்மைதான் – பாதிக்கப்பட்டவர் ஒப்புதல்!

தென்காசி புளியரையில் காட்டு யானை தாக்கியதில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பலி!

போதைப்பொருள் விவகாரம் – பிக் பாஸ் பிரபலம் இல்லத்தில் காவல்துறை சோதனை!

ஈரோடு ஜவுளிக்கடைகளில் 50 சதவீத தள்ளுபடி விற்பனை – அதிகாலை முதல் காத்திருந்த வாடிக்கையாளர்கள்!

தேனி சிறப்பு சார்பு ஆய்வாளர் கொலை வழக்கு – 3 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies