வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே 2 பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து கடவுளாக வழிபடும் வினோத திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட தொங்குமலை கிராமத்தில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைகிராம மக்கள் குடும்பங்களாக வசித்து வருகின்றனர்.
இங்கு காளியம்மன் கோயில் திருவிழா கடந்த ஒரு வாரமாக வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் இறுதி நாளில், பெண்கள் மட்டும் பங்கேற்று கும்மியடித்து, குத்தாட்டம் போட்டு மகிழ்ந்தனர்.
அப்போது, மணக்கோலத்தில் இருந்த 2 பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து தெய்வமாக வழிபட்டனர். பெண் குழந்தைகளை வணங்கினால், விவசாயம் செழிக்கும், ஊர் மக்களுக்கு நோய் வராது என்பது அவர்களது நம்பிக்கையாக உள்ளது.