பாம்பனில், 700 டன் கொண்ட செங்குத்து பாலத்தினை இயக்கும் இழுவை இயந்திரத்தில் சக்கரம் பொருத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலில் 550 கோடி ரூபாய் செலவில் 2.8 கிலோமீட்டர் தொலைவிற்கு, கப்பல்கள் சென்று வருவதற்கு ஏற்ப, செங்குத்து பாலத்துடன் புதிய ரயில் பாலம் அமைக்கும் பணி, கடந்த 4 ஆண்டுகளாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 700 டன் கொண்ட செங்குத்து பாலத்தினை இயக்கும் இழுவை இயந்திரத்தில் சக்கரம் பொருத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்தாண்டுக்குள் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று, ரயில் சேவை புதிய பாலத்தில் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.