ராகுல் கருத்துக்கு பிரதமர் மோடி எதிர்ப்பு!
Sep 22, 2026, 08:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராகுல் கருத்துக்கு பிரதமர் மோடி எதிர்ப்பு!

இந்துக்களின் பெருமை ராகுலுக்கு தெரியவில்லை!- அமித்ஷா

Murugesan M by Murugesan M
Jul 1, 2024, 04:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மக்களவையில் ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி,

சிவபெருமான் கழுத்தில் உள்ள பாம்பைப் போல தாங்கள் அச்சமின்றி இருப்பதாக கூறினார். மேலும், சிவபெருமான் புகைப்படத்தை அவர் தூக்கிக் காண்பித்தார். இதற்கு ஆட்சேபம் தெரிவித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, அவை அலுவல்களை மட்டும் விவாதிக்குமாறு அறிவுறுத்தினார்.

இந்துக்களை வன்முறையாளர்கள் என ராகுல் காந்தி கூறியதற்கு பிரதமர் மோடி எதிர்ப்பு தெரிவித்தார். ஒட்டுமொத்த இந்துக்களையும் வன்முறையாளர்கள் என சித்தரிப்பது மிகவும் தீவிரமான பிரச்சினை என பிரதமர் மோடி ஆவேசமாக கூறினார்.

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,

கோடிக்கணக்கானோர் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுவது குறித்து ராகுல் காந்திக்கு தெரியவில்லை என்றும், வன்முறையை மதத்துடன் தொடர்புபடுத்துவது தவறு என்றும் தெரிவித்தார். இதற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அமித் ஷா கேட்டுக்கொண்டார்.

விவாதத்தின் மீது பேசிய பிரதமர் மோடி,

எதிர்க்கட்சித் தலைவர் கூறிய கருத்துகளைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டுமென ஜனநாயகமும், அரசியலமைப்பு சட்டமும் தனக்கு கற்றுத் தந்ததாக கூறினார்.

பின்னர், அக்னிவீரர் திட்டத்தை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு,  ஆட்சேபம் தெரிவித்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அக்னிவீரர் திட்டத்தை விமர்சித்து தேசத்தை ராகுல் காந்தி தவறாக வழிநடத்த முயற்சிப்பதாகவும், எல்லையில் உயிர்நீத்த ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags: PM Modi opposes Rahul's comments!
Share
Tweet
SendShare
Previous Post

ரூ.550 கோடி செலவில் 2.8 கிலோமீட்டர் தொலைவிற்கு பாம்பன் பாலம்!

Next Post

மாநில கல்விக்கொள்கை! – அறிக்கை சமர்ப்பிப்பு!

Related News

நடப்பு ஆண்டில் சீனாவுக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி 40 % அதிகரிப்பு!

போலி ஆவணம் மூலம் சிம் கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை – மத்திய தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை!

யுபிஐ கட்டணம் தொடர்பாக மக்களை திசைதிருப்பும் வகையில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது – நிர்மலா சீதாராமன்

ஒடிசா கடற்கரை ஆழ்கடல் படுகையில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் – முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

Load More

அண்மைச் செய்திகள்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies