மாநில கல்விக் கொள்கை தொடர்பான அறிக்கையை ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது.
தமிழகத்திற்கென பிரத்யேக கல்வி கொள்கை உருவாக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022-ம் ஆண்டு அறிவித்தார்.
இதற்கென டெல்லி உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இக்குழு கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனைகளை பெற்றது.
இதனைத் தொடர்ந்து, ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு, தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அறிக்கை சமர்ப்பித்தது. 3, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தக் கூடாது,
கல்லூரி சேர்க்கையின்போது 12-ம் வகுப்பு மதிப்பெண்களுடன் 11-ம் வகுப்பு மதிப்பெண்களையும் கணக்கிட வேண்டும் போன்ற அம்சங்கள் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.