அசாமில் பிரம்மபுத்தரா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மாநிலத்தின் பல பகுதிகள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன.
அசாம் மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருவதால் பிரம்மபுத்திரா மற்றும் அதன் துணை நதிகளில் அபாய அளவைத் தாண்டி தண்ணீா் செல்கிறது. இதனால் காமரூப், கரீம்கஞ்ச், உள்ளிட்ட மாவட்டங்கள் தண்ணீரில் மிதக்கின்றன.
7 மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 34 ஆயிரம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாமில் கனமழை காரணமாக இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 71 நிவாரண முகாம்களில் 11 ஆயிரம் பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, அசாமின் வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சா்மாவிடம் பிரதமர் மோடி தொலைப்பேசி வாயிலாக கேட்டறிந்தார். மேலும், மத்திய அரசு முழு ஒத்துழைப்பை வழங்கும் எனவும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.