நீலகிரி மாவட்டம் கூடலூரில் பெய்த கனமழை காரணமாக, குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்தது.
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது.
கூடலூரில் நேற்று நள்ளிரவு முதல் பெய்து வரும் மழை காரணமாக இருவயல் கிராமத்தில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது.
இருவயல் கிராமத்தில் அமைந்துள்ள ஆற்றை தூர்வார வனத்துறையினர் அனுமதி வழங்க மறுப்பதால், பருவமழை காலங்களில் காட்டாற்று வெள்ளம் ஏற்படுவது தொடர் கதையாக உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தவிர்க்க, ஆற்றை தூர்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.