டி-20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி ஜிம்பாப்வே புறப்பட்டது.
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடவுள்ளது.
இந்தியா- ஜிம்பாப்வே இடையிலான முதலாவது டி-20 போட்டி வரும் 6ஆம் தேதி நடைபெறுகிறது. மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி இந்த தொடரில் விளையாடவுள்ளது.
இந்த தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி ஜிம்பாப்வே நாட்டிற்கு புறப்பட்டு சென்றது.