கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புண்படுத்திவிட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய பிரதமர் மோடி, இந்துக்களை வன்முறையாளர்களாக சித்தரித்த காங்கிரஸை நூறு ஆண்டுகளானாலும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று தெரிவித்தார்.
இந்துக்களை வேதனைப்படுத்துவதே காங்கிரஸின் வாடிக்கையாகிவிட்டதாக கூறிய பிரதமர் மோடி, இந்துக்கள் சகிப்புத்தன்மை கொண்டவர்கள் என்பதால் அவர்களை விமர்சிக்கிறீர்களா என்றும் காங்கிரஸுக்கு கேள்வி எழுப்பினார்.
சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியாவுடன் ஒப்பிட்டு காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் கருத்து தெரிவித்ததாக திமுக மீதும் பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சனத்தை முன்வைத்தார்.