மதுரையில் முதியவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரையை சேர்ந்த முருகேசன் என்பவர் தனது வீட்டு வாசலில் நின்றுக் கொண்டிருக்கும் போது மர்ம நபர்கள் அவரை வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், பாக்கியராஜ், மணிகண்டன் , தமிழரசன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.
இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் நில விற்பனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது, அதனால் கொலை செய்ததும் தெரியவந்தது.