கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே கடன் பிரச்சனையால் விஷம் குடித்த தாய் உயிரிழந்த நிலையில், தந்தை, மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகி்ச்சை பெற்று வருகின்றனர்.
மாமூடு பகுதியை சேர்ந்த அஜீத்குமார் – சைலஜா தம்பதியருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் திருமணம் ஆகி, கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இளைய மகன் சுரப்ஜித் வீட்டில் இருந்தபடி ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தம்பதியருக்கு சுமார் 2 கோடி வரை கடன் இருப்பதால், மூத்த மகனிடம் பணம் கேட்டபோது இல்லை என கூறியதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த தம்பதியர் மற்றும் இளைய மகன் மூவரும் விஷம் குடித்துள்ளனர். தாய் உயிரிழந்த நிலையில், தந்தை, மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகி்ச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.