கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே விநாயகர் சிலையை பறிமுதல் செய்த வட்டாட்சியரை கண்டித்து முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
மாளிகைமேடு கிராமத்தில் பட்டியலின மக்கள் பொது இடத்தில் விநாயகர் கோயில் கட்டுவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
இதற்கு அதே கிராமத்தில் உள்ள மாற்று சமூகத்தைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பொது இடத்தில் பட்டியலின மக்கள் விநாயகர் சிலை வைத்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வேப்பூர் வட்டாட்சியர் சம்பவ இடத்தில் இருந்த விநாயகர் சிலையை பறிமுதல் செய்ததால், மாளிகைமேடு பேருந்து நிறுத்தத்தில் பட்டியிலன மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து வேப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.