கடலூரில் உள்ள புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடக்க விழாவில் நடராஜர் சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் கோயில் அர்ச்சகர் கொடியை ஏற்றியபின் தீபாராதனை காட்டப்பட்டது.
10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 11ம் தேதியும், ஆனி திருமஞ்சன தரிசன விழா 12ம் தேதியும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.