ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் ருமேனியா அணியை வீழ்த்தி நெதர்லாந்து அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வரும் நிலையில், நெதர்லாந்து அணியும் ருமேனியா அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நெதர்லாந்து அணி ஆட்டத்தின் 20 வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தியது.
இதையடுத்து ஆட்ட முடிவில் 3-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அணி ருமேனியா அணியை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றது.