தென்காசியில் அரசு பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் முறைகேடாக நிரப்பப்பட்டதை கண்டித்து ஆசிரியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசியில் அரசுப் பள்ளியில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு நாளை நடைபெற உள்ளது.
இந்நிலையில் கலந்தாய்வுக்கு முன்னதாகவே பணியிடங்கள் நிரப்பப்பட்டு பணி ஆணைகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்தும், முறைகேடாக வழங்கப்பட்ட பணி ஆணைகளை ரத்து செய்ய வலியுறுத்தியும் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு பட்டதாரி ஆசிரியர் கழக ஆசிரியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.