விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்ற அகழாய்வில் மாவு கல்லால் ஆன அணிகலன் கண்டெடுக்கப்பட்டது.
வெம்பக்கோட்டையில் 3ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. முன்னதாக நடந்த இரண்டாம் கட்ட அகழாய்வில் அரிய வகை கலைப்பொருட்கள் பல கண்டெடுக்கப்பட்டது.
தற்போது நடந்துவரும் 3ம் கட்ட அகழாய்வில் மாவுக் கல்லால் ஆன கழுத்தில் அணியக்கூடிய அணிகலன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சுமார் 30 மில்லி கிராம் எடையுடன் பச்சை நிறத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.