கஜகஸ்தானில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கி லாவ்ரோவை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடைபெறுகிறது.
இதையொட்டி, அங்கு சென்ற வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கி லாவ்ரோவை சந்தித்தார். முன்னதாக அஸ்தானாவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு ஜெய்சங்கர் மரியாதை செலுத்தினார்.