நடிகை வரலட்சுமி சரத்குமார்- தொழிலதிபர் நிகோலய் சச்தேவின் திருமண வரவேற்பு சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
அதேபோல், திரையுலக பிரபலங்களும் வரலட்சுமி சரத்குமாரின் திருமண வரவேற்பில் பங்கேற்றனர்.
முன்னதாக, நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், தொழிலதிபர் நிகோலய் சச்தேவுக்கும் நேற்று முன்தினம் தாய்லாந்தில் திருமணம் நடைபெற்றது. அதில் குடும்பத்தினரும், உறவினர்களும் கலந்து கொண்டனர்.