தென்காசி அருகே பெண்களை சுமார் 4 கி.மீ. அலைக்கழித்த அரசுப் பேருந்தை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில மேலமெஞ்ஞானபுரம், ராமலிங்கபுரம் ஆகிய கிராமங்கள் அடுத்தடுத்து அமைந்துள்ளன.
இந்நிலையில் 4 பெண்கள் அரசுப் பேருந்தில் ஏறி ராமலிங்கபுரத்தில் பேருந்தை நிறுத்துமாறு கூறினர். ஆனால் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் சுமார் 4 கி.மீ. தூரம் கடந்துச் சென்று பெண்களை அலைக்கழித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியபின் போராட்டம் கைவிடப்பட்டது.