மதுரை மாவட்டம் மேலூர் அருகே பட்டப்பகலில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 55 சவரன் தங்க நகையை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மிக்கெட் பகுதியை சேர்ந்த செந்தில் மற்றும் அவரது மனைவி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுள்ளனர்.
பின்னர் வீட்டுக்கு வந்த பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 55 சவரன் தங்க நகை மற்றும் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
மகள் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த நகைகள் கொள்ளை போனது குறிப்பிட்டத்தக்கது.