திருச்சி மாவட்டம் முசிறி அருகே அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பேருந்து ஓட்டுனர் காயம் அடைந்தார்.
நாமக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது பேருந்து மீது மோதியது.
இதனைத்தொடர்ந்து மரத்தின் மீது பேருந்து மோதியது. இதில் பேருந்து ஓட்டுநர் சதீஷ்குமார் காயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நால்வாய்ப்பாக பயணிகள் எவ்வித பாதிப்பும் இன்றி தப்பினர்.