சிவகங்கை வார சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 100 கிலோ ரசாயனம் தடவிய பச்சை பட்டாணியை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் புதன்கிழமைகளில் நடைபெறும் வாரச்சந்தையில் 300க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் காய்கறிகளை வாங்கி வருவது வழக்கம்.
இந்த சந்தையில் ரசாயனம் தடவிய காய்கறிகள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின்பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 100 கிலோ அளவிலான ரசாயனம் தடவிய பச்சை பட்டாணியை பறிமுதல் செய்து வியாபாரிகளுக்கு அபராதம் விதித்தனர்.