கேரளாவில் 15 வருடங்களுக்கு முன் மாயமான பெண்ணின் உடல் பாகங்களை கணவன் வீட்டிலுள்ள கழிவுநீர் தொட்டியில் இருந்து போலீசார் மீட்டனர்.
ஆலப்புழாவை சேர்ந்த கலா, அனில்குமார் என்பவரை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ள நிலையில் கடந்த 2009ம் ஆண்டு கலா மாயமானார். இதனையடுத்து அனில்குமார் மறுமணம் செய்துகொண்டு இஸ்ரேலில் வேலைபார்த்து வருகிறார்.
இந்நிலையில் கலா கொல்லப்பட்டதாக வந்த ரகசிய தகவலின்பேரில் அனில்குமாரின் இல்லத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது சீரமைப்பு பணிகள் நடந்துவரும் வீட்டின் கழிவுநீர் தொட்டியில் உருக்குலைந்த எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து கொலையில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த போலீசார் அனில்குமாரை கேரளாவுக்கு அழைத்துவர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
காதல் மனைவியை கணவனே கொன்றுவிட்டு 15 வருடங்களாக நாடகமாடிய சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.