சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் வீட்டின் தகர மேற்கூரை காற்றில் பறந்து விழுந்ததில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
இப்பகுதியில் வீசிய பலத்த காற்றின் போது கீழே விழுந்த தகர மேற்கூரை அவ்வழியாக சென்ற ஆட்டோ மீதும், அருகிலிருந்த ஸ்விகி ஊழியர் மீதும் விழுந்தது.
இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநருக்கும் மற்றும் ஸ்விகி ஊழியருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் 2 பெண்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.
இந்நிலையில் முறையாக மேற்கூரை அமைக்காத வீட்டின் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.