உடல் எடையை குறைக்க பல வழிகளில் பலர் பல விதமான முயற்சிகளைக் கடைப் பிடித்து வருகின்றனர். ஒருவர் செய்யும் வழிமுறைகள் இன்னொருவருக்குப் பலன் அளிப்பதில்லை. இந்நிலையில், தண்ணீர் விரதம் மேற்கொண்டு எடையைக் குறைத்திருக்கிறார் ஒருவர். என்ன அது தண்ணீர் விரதம் என்பதைப் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
வட அமெரிக்க பகுதியில் உள்ள கோஸ்ட்டாரிக்கா நாட்டைச் சேர்ந்த அடிஸ் மில்லர், தண்ணீர் விரதம் இருந்து தமது உடல் எடையைக் குறைத்திருக்கிறார். அதாவது, தண்ணீர் விரதம் இருந்து, 21 நாட்களில் 13.1 கிலோ எடையைக் குறைத்த அடிஸ் மில்லர், தண்ணீர் விரதம் உண்மையிலேயே வாழ்க்கையை மாற்றி விட்டதாகவும் அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதில், மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
தனது இன்ஸ்டா பக்கத்தில், தண்ணீர் விரதத்துக்கு முன் மற்றும் பின் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ள அவர், 21 நாட்களில் 6 சதவீதம் உடல் கொழுப்பு குறைந்தது எப்படி என்பதை விளக்கி இருக்கிறார் ஏற்கனவே மெலிந்த ஒருவருக்கு 21 நாள் தண்ணீர் விரதம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் விளக்கம் தந்திருக்கிறார் அடிஸ் மில்லர்.
அடிஸ் பதிவால் , . மேலும் அனைவருக்கும் தண்ணீர் விரதம் பயனுள்ளதாக இருக்குமா ? என்ற கேள்வியையும் பலர் எழுப்பியுள்ளனர்.
தண்ணீர் விரதம் என்றால் என்ன பார்க்கலாம்.
தண்ணீர் விரத நாட்களில் தண்ணீரை மட்டுமே குடிக்க வேண்டும் என்றும், வேறு பழச் சாறோ அல்லது வேறு வகையான திரவ உணவையோ எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் கூறப்படுகிறது.
உடலில் உள்ள விஷத் தன்மைகளை நீக்கவும், நல்ல செரிமானம் ஏற்படவும் மற்றும் சிறந்த மனத் தெளிவு பெறவும், இந்த தண்ணீர் விரதம் பயன்படுகிறது என்று ஆரோக்கிய வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், உடல் எடை குறைக்கவும், ரத்த சர்க்கரை அளவை மேம்படுத்தவும், இன்சுலின் அதிக அளவு சுரப்பதற்கும் தண்ணீர் விரதம் உதவுகிறது என்று உலக அளவில் நடத்தப் பட்ட பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இன்னொரு ஆய்வில், எப்போதாவது தண்ணீர் விரதம் இருப்பது, ஆக்ஸிஜன் அழுத்தத்தைக் குறைப்பதன் மூலமும் ஊட்டச்சத்து கெட்டோசிஸை ஊக்குவிப்பதன் மூலமும் இதய நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது என்று கண்டறியப் பட்டுள்ளது.
குறிப்பாக, தண்ணீர் விரத காலத்தில், உடல் கெட்டோசிஸ் நிலைக்கு செல்கிறது. அந்நிலையில், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரைகள் இல்லாத நிலையில் கொழுப்பை எரிபொருளாக எரித்து, எடை இழப்புக்கு வழிவகுக்கிறது.
தண்ணீர் விரதம் எடை குறைப்புக்கு ஒரு கவர்ச்சியான முறையாகத் தோன்றினாலும் அது அனைவருக்கும் பொருந்தக் கூடியதாக இல்லை.
சிறு வயது குழந்தைகள், 75 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள், மற்றும் பாலூட்டும் பெண்கள் மற்றும் தண்ணீர் விரதத்தைத் தவிர்பபது நல்லது என்று மருத்துவகள் அறிவுறுத்துகிறார்கள்.
மேலும் இன்சுலின் சார்ந்த நீரிழிவு நோய் உள்ளிட்ட சில உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்களும் தண்ணீர் விரதம் இருப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
நீண்ட நேரம் ஒருவர் உணவு உட்கொள்ளாதபோது, அவரது உடலில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருக்கும். இதனால், அவருக்கு தலைச்சுற்றல், குமட்டல், தலைவலி, மலச்சிக்கல், குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் வீரியக் குறைபாடு மற்றும் பிற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுகிறது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மருத்துவர் ஆலோசனை இல்லாமல் நீண்ட நாட்கள் தண்ணீர் விரதம் இருப்பது மரணத்தை ஏற்படுத்தும் என்றும் மருத்துவ அறிஞர்கள் எச்சரித்துள்ளனர்.