கும்மிடிப்பூண்டியில் பட்டா நிலத்தில் கட்டப்பட்ட வீட்டை அகற்ற முயன்ற தமிழக அரசுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திமுக ஆட்சியில் ரியல் எஸ்டேட் முதலாளிகள் பலன்களையும், சலுகைகளையும் அனுபவிக்கும் அதே வேளையில்,
சாமானியர்களின் வீடுகள் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாக கூறி இடிக்கப்படுகின்றன என பதிவிட்டுள்ளார்.
கும்மிடிப்பூண்டியில் பட்டா நிலத்தில் கட்டப்பட்ட தனது வீட்டை அரசு அதிகாரிகள் இடிக்க விடாமல் தடுக்க இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இதுபற்றி எல்லாம் கவலைப்படாத மாநில மதுவிலக்கு மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, தீபாவளிக்கு முன்னதாக டாஸ்மாக்கில் 90 மில்லி பாட்டில்களை அறிமுகப்படுத்தும் பணியில் மும்முரமாக இருந்ததாக அண்ணாமலை விமர்சித்துள்ளார்.