விருதுநகர் மாவட்ம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆனி மாத அமாவாசையையொட்டி பக்தர்கள் குவிந்தனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலில் விசேஷ தினங்களில் மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஆனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு கடந்த 4ம் தேதி முதல் வரும் 6ம் தேதி வரை பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
இதனையடுத்து கோயிலில் குவிந்த பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.