கரூரில், சொத்து மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் நி போலீசார் நடத்திய சோதனை நிறைவு பெற்றது.
போலி ஆவணங்கள் மூலம் ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை மோசடி செய்தது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சொத்து மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டனர். மேலும், எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான பெட்ரோல் நிலையத்தில் பணிபுரியும் யுவராஜ் என்பவரது வீட்டிலும், வேலாயுதம்பாளையம் பகுதியில் உள்ள யுவராஜின் ஆதரவாளர்களான ரகு மற்றும் ஈஸ்வரமூர்த்தி ஆகியோரது வீட்டிலும் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தப்பட்டது. 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சோதனை நிறைவு பெற்றது.