ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஆனி மாத அமாவாசையையொட்டி பக்தர்கள் புனித நீராடி வரும் நிலையில், நகராட்சி நிர்வாகத்தினர் கழிவுநீரை திறந்துவிட்டதால் அதிர்ச்சியடைந்தனர்.
ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் குவிந்தனர். அதனைத்தொடர்ந்து அக்னி தீர்த்த கடற்கரைக்கு சென்ற பக்தர்கள் மறைந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்தனர்.
பின்னர் பூஜைக்காக அழைத்து சென்றபசுவிற்கு பழங்கள் கீரை வகைகள் கொடுத்து வழிபட்டனர். கூட்ட நெரிசல் காரணமாக சுமார் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே ராமநாதபுரம் ராமேஸ்வர கோயில் அக்னி தீர்த்த கடலில் சுத்திகரிக்கப்படாமல் உள்ள கழிவுநீரை நகராட்சி நிர்வாகத்தினர் கலந்துவிட்டதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.