குமரி மாவட்டம் குழித்துறை அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தை சார்ந்த ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குழித்துறை பணிமனையில் இருந்து மாவட்டம் முழுவதும் உள்ள கிராமப்புற பகுதிகளுக்கு சுமார் 130 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காரணமில்லாமல் பணியிட மாற்றம் செய்வது, 12 மணி நேரம் பணி செய்ய வற்புறுத்துவது ஆகிய குற்றச்சாட்டுகளை ஊழியர்கள் முன்வைத்து போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தகவலறிந்த விளவங்கோடி சட்டமன்ற உறுப்பினர் தாரகை, தொழிலாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.