அஸ்ஸாம் மாநிலம் திப்ரூகரில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளை முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா பார்வையிட்டார்.
அஸ்ஸாமில் கொட்டி தீர்க்கும் கனமழைக்கு 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். திப்ரூகரில் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா, பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தண்ணீர் வடிய தொடங்கிவிட்டதால், நிலைமை சீராகி வருவதாக தெரிவித்தார்.
ஆக்கிரமிப்பு காரணமாகவே ஓரிரு இடங்களில் தண்ணீர் தேங்கியதாக கூறிய ஹிமந்த விஸ்வ சர்மா, கழிவுநீர் கால்வாய்களை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டதால், அங்கு சுத்திகரிப்பு சாதனங்களைக் கொண்டு செல்ல முடியவில்லை என தெரிவித்தார்.
மேலும் மின் தடை குறித்து பேசிய அவர், அனைத்து இடங்களிலும் தண்ணீர் தேங்கியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தெரிவித்தார்.