சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் வந்தே மாதரம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றுள்ளனர்.
மேலும் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி, பாஜக மூத்த தலைவர்களான பொன் ராதாகிருஷ்ணன்,தமிழிசை சவுந்தரராஜன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட 4000-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகளும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
மக்களவைத் தேர்தலுக்கு பிறகு நடைபெறும் இந்த கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை, கள்ளச்சாராயம் விற்பனை உள்ளிட்டவற்றில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.