பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு அக்கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாயாவதி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவரான ஆம்ஸ்ட்ராங், சென்னையில் அவரது வீட்டின் வெளியே கொடூரமான முறையில் கொல்லப்பட்டது மிகவும் வருந்தத்தக்கது மற்றும் கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ளார்.
தொழில்ரீதியாக வழக்கறிஞரான அவர், மாநிலத்தில் பட்டியலினத்தோருக்கான வலுவான குரலாக ஆம்ஸ்ட்ராங் அறியப்பட்டார் என்றும் மாயாவதி கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசு கொலையாளிகளை தண்டிக்க வேண்டும் என்றும் மாயாவதி வலியுறுத்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாளை தமிழகம் வரவுள்ளதாகவும், தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் எனவும் மாயவதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.