விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இணைந்து கொட்டும் மழையில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக வேட்பாளர் சி.அன்புமணி போட்டியிடுகிறார். இந்நிலையில் வேட்பாளரை ஆதரித்து நந்திவாடி பகுதியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார்.
இதேபோல மற்றொரு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பிரச்சாரத்தை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது பொதுமக்களிடம் அண்ணாமலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதை பார்த்த அன்புமணி ராமதாஸ், பின்னர் அவருடன் இணைந்து கொட்டும் மழையில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.